
T10 League: Team Abu Dhabi beat Deccan Gladiators by 8 runs (Image Source: Google)
டி10 லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிரு இடங்களைப் பிடித்துள்ள டெக்கான் கிளாடியேட்டர்ஸ் - டீம் அபுதாபி அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெக்கான் அணி முதலில் பந்துவீசுவதாக முடிவுசெய்தது. அதன்படி களமிறங்கிய டீம் அபுதாபி அணி கேப்டன் லிவிங்ஸ்டோனின் அபாரமான அரைசதத்தினால் 10 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக கேப்டன் லிவிங்ஸ்டோன் 59 ரன்களைச் சேர்த்தார். டெக்கான் அணியில் டைமல் மில்ஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.