
T10: Russell, Moores Star In Deccan Gladiators' 24 Run Win Over Chennai Braves (Image Source: Google)
அபுதாபியில் நடைபெற்று வரும் டி10 லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் - சென்னை பிரேவ்ஸ் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த டெக்கான் அணி ஆண்ட்ரே ரஸ்ஸல், டாம் மூர்ஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 146 ரன்களைச் சேர்த்தது. இதில் ரஸ்ஸல் 43 ரன்களையும், மூர்ஸ் 47 ரன்களையும் சேர்த்தனர்.
அதன்பின் இலக்கை துரத்திய சென்னை அணி தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் அடுத்து வந்த ஏஞ்சலோ பெரேரா, ரவி போபாரா ஆகியோர் அரைசதம் அடித்து அணியை வெற்றியின் பக்கம் வரை அழைத்து சென்றனர்.