
T20 Blast: Ben Stokes bowling helps Durham comfortable win (Image Source: Google)
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் போது காயமடைந்த இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், தற்போது குணமடைந்து மீண்டும் விளையாட ஆரம்பித்துள்ளார். அதன்படி இங்கிலாந்தின் உள்ளூர் டி20 தொடரான டி20 பிளாஸ்ட் தொடரின் டர்ஹாம் அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டர்ஹாம்-வார்விக்ஷயர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் என்ற வார்விக்ஷயர் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய டர்ஹாம் அணி பான்கிராஃப்ட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களை எடுத்தடுத்து.