Advertisement
Advertisement
Advertisement

டி20 பிளாஸ்ட்: டிம் டேவிட் அதிரடியில் லங்காஷயர் அசத்தல் வெற்றி!

டி20 பிளாஸ்ட்: வெர்ஸ்டர்ஷயர் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் லங்காஷயர் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan May 30, 2022 • 15:06 PM
T20 Blast: Tim David's quick fire fifty helps Lancashire defeat Worcestershire by 12 runs
T20 Blast: Tim David's quick fire fifty helps Lancashire defeat Worcestershire by 12 runs (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரைப் போலவே இங்கிலாந்தில் நடத்தப்படும் டி20 கிரிக்கெட் தொடர் வைட்டாலிட்டி டி20 பிளாஸ்ட். இதில் நேற்று நடைபெற்ற நார்த் குரூப் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டத்தில் லங்காஷயர் - வெர்ஸ்டர்ஷயர் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். 

மான்செஸ்டரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லங்காஷயர் அணி பவர் ப்ளேயில் 59/3 என்று ஆனது. அதன் பிறகு ஸ்டீவன் கிராஃப்ட் (22), லியாம் லிவிங்ஸ்டன்(26) கொஞ்சம் அணியை நிலை நிறுத்தினர். அதன் பிறகு இருவரும் ஆட்டமிழக்க, மற்றொரு வீரர் டேனி லாம்ப் முதல் பந்திலேயே வெளியேற 13 ஓவர்களில் 98/6 என்ற நிலைக்கு லங்காஷயர் தள்ளப்பட்டது.

Trending


இதையடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் டிம் டேவிட் எதிரணி பந்துவீச்சை பவுண்டரிக்கு விராட்டி அசத்தினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டிம் டேவிட் அரைசதம் கடந்ததுடன், 25 பந்துகளில் 60 ரன்களையும் குவித்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லங்காஷயர் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக டிம் டேவிட் 60 ரன்களைச் சேர்த்திருந்தார். 

அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வெர்ஸ்டர்ஷயர் அணியில் எட் பொல்லாக் 12, பிரெட் 37, ஜேக் ஹைனிஸ் 12 என விக்கெட்டுகளை இழந்தனர்.

இதையடுத்து களமிறங்கிய காலின் முன்ரா - ஜேக் லிபி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் காலின் முன்ரோ அரைசதம் கடந்தார்.

மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜேக் லிபி 33 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 53 ரன்களில் காலின் முன்ரோவும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறினர்.

இதனால் 20 ஓவர்களில் வெர்ஸ்டர்ஷயர் அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. லங்காஷயர் தரப்பில் கிளீசன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதன்மூலம் லங்காஷயர் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெர்ஸ்டர்ஷயர் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement