
T20 WC 11th Match: Oman bowled out by 122 runs against Scotland (Image Source: Google)
டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெற்று வரும் 10ஆவது லீக் ஆட்டத்தில் ஓமன் - ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஓமன் அணியில் ஜதிந்தர் சிங் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து வந்த பிரஜபதியும் 3 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த அகிப் இலியாஸ் - முகமது நதீம் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. அதன்பின் அகிப் இலியாஸ் 37 ரன்களிலும், நதீம் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.