Advertisement

டி20 உலகக்கோப்பை: சூப்பர் 12 சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திய ஸ்காட்லாந்து!

பப்புவா நியூ கினியா அணிக்கெதிரான தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Advertisement
T20 WC 2021 5th Match: Scotland brightens up opportunity for Super 12 round!
T20 WC 2021 5th Match: Scotland brightens up opportunity for Super 12 round! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 19, 2021 • 06:51 PM

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 5ஆவது தகுதிச்சுற்று போட்டியில் ஸ்காட்லாந்து - பப்புவா நியூ கினியா அணிகள் மோதின. 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 19, 2021 • 06:51 PM

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி பெர்ரிங்டனின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களைச் சேர்த்தது. 

Trending

இதில் அதிகபட்சமாக பெர்ரிங்டன் 70 ரன்களைச் சேர்த்தார். எதிரணி தரபில் கபுவா மோரியா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணி ஆரம்பம் முதலே எதிரணி பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன்பின் 7ஆவது விக்கெட்டிற்கு களமிறங்கிய நார்மன் வனுவா அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தார். இருப்பினும் 47 ரன்களில் வனுவாவும் ஆட்டமிழந்து வெளியேறினார். 

இதனால் 19.3 ஓவர்கள் முடிவில் பப்புவா நியூ கினியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஸ்காட்லாந்து அணி தரப்பில் ஜோஷ் தேவே 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதன்மூலம் ஸ்காட்லாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியா அணியை வீழ்த்தி, சூப்பர் 12 சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement