
T20 WC 2021: India beat England By 7 wickets (Image Source: Google)
டி20 உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி இங்கிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி ஜானி பேர்ஸ்டோவ், மொயீன் அலி ஆகியோரது அபார ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக பேர்ஸ்டோவ் 49 ரன்களையும், மொயீன் அலி 43 ரன்களையும் குவித்தனர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.