
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தங்களது முதல் போட்டியாக 24ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. ஏற்கனவே இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு தற்போது பயிற்சி போட்டியில் விளையாடி வந்தாலும் இந்த உலகக் கோப்பை தொடரின் எந்தெந்த வீரர்கள் விளையாடுவார்கள் ? என்ற கேள்வி தற்போது வரை இன்னும் குறையாமல் நீடித்து வருகிறது.
ஏனெனில் அணியில் இடம் பெற்றுள்ள பல வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதாலும், சில வீரர்கள் சொதப்பலாக விளையாடி வருவதாலும் டீம் காம்பினேஷன் எவ்வாறு அமையும் ? என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே அணியில் அதிகமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்ற காரணத்தினால் அக்சர் பட்டேல் அணியிலுருந்து வெளியேற்றப்பட்டார்.
அவருக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஷர்துல் தாகூர் அணிக்குள் வந்தார். ரிசர்வ் வீரராக இருந்த ஷர்துல் தாகூர் அணிக்குள் வந்து அணியில் இருந்த அக்சர் பட்டேல் ரிசர்வ் வீரராக மாற்றப்பட்டார். இந்நிலையில் தற்போது ஷர்துல் தாகூர் இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் பிடிக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது என்று தெரிகிறது.