ஹர்திக் பாண்டியா நிச்சயம் பந்துவீசுவார் - விராட் கோலி நம்பிக்கை!
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நிச்சயம் பந்துவீசுவார் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
சூப்பர் 12 சுற்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் நாளை மோதவுள்ளன. இந்த ஆட்டத்துக்கான 12 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் இன்று அறிவித்துள்ளது.
இரு அணிகளும் ஐசிசி தொடர்களில் மட்டும் விளையாடிவருவதால், இப்போட்டியின் மீதான எதிர்பாரப்பும், பரபரப்பும் ரசிகர்கள் மத்தில் அதிகரித்துள்ளது.
Trending
இந்நிலையில் இப்போட்டி குறித்து பேசிய விராட் கோலி, “பாகிஸ்தான் மிகவும் வலுவான அணி. நீண்ட நாளாகவே அவர்கள் வலுவான அணியாக உள்ளார்கள். அவர்களுக்கு எதிராகச் சிறப்பாக விளையாட வேண்டும். ஆட்டத்தின் போக்கை எப்போது வேண்டுமானாலும் மாற்றக் கூடிய வீரர்கள் பாகிஸ்தான் அணியில் உள்ளார்கள்.
இந்திய அணியில் விளையாடும் வீரர்களின் பெயர்களை இன்று நான் சொல்லப்போவதில்லை. அனைத்து விதமான சூழலையும் எதிர்கொள்ளும் வீரர்களைத் தேர்வு செய்துள்ளோம். ஐபிஎல் போட்டியில் விளையாடியதால் எங்கள் வீரர்கள் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட தயாராக உள்ளார்கள்.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஏதாவது ஒரு தருணத்தில் 2 ஓவர்களையாவது வீசும் அளவுக்கு உடற்தகுதியை மேம்படுத்தி வருகிறார் ஹார்திக் பாண்டியா. அவர் பந்துவீசும் வரை இதர வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வோம். மற்றவர்கள் ஒரு ஓவர், இரண்டு ஓவர்கள் வீசக்கூடிய சில திட்டங்களை வகுத்துள்ளோம்.
6ஆம் நிலை வீரராக பாண்டியாவிடம் உள்ள திறமையை ஒரே இரவில் கொண்டுவர முடியாது. அதனால் தான் ஒரு பேட்டராக அவர் அணியில் இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். சிறப்பாக விளையாடும்போது எதிரணியைத் திணறடித்து விடுவார்.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
உலக கிரிக்கெட்டில் 6ஆம் நிலை பேட்டராக அதற்கென தகுதி பெற்றவர்களே களமிறங்குகிறார்கள். பாண்டியாவால் தற்போது முடியாத ஒன்றை நாங்கள் வற்புறுத்த மட்டோம். சில ஓவர்கள் வீச அவர் ஆர்வமாக உள்ளார். அப்படி அவர் செய்யும்போது அணி இன்னும் சிறப்பாக விளையாடும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now