Advertisement
Advertisement
Advertisement

T20 WC 2024, Super 8: பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக்; வங்கதேசத்தை 140 ரன்களில் சுருட்டியது ஆஸி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 141 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
T20 WC 2024, Super 8:  பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக்; வங்கதேசத்தை 140 ரன்களில் சுருட்டியது ஆஸி!
T20 WC 2024, Super 8: பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக்; வங்கதேசத்தை 140 ரன்களில் சுருட்டியது ஆஸி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 21, 2024 • 08:07 AM

 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 21, 2024 • 08:07 AM

9ஆவது சீசன் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை  கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இந்த 8 அணிகளில் இருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் குரூப் 1-இல் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆண்டிகுவாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது வங்கதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

Trending

அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர் தன்ஸித் ஹசன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான லிட்டன் தாஸ் 16 ரன்களிலும், ரிஷாத் ஹொசைன் 2 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் வங்கதேச அணியானது 67 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் தாவ்ஹித் ஹிரிடோய் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். 

இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நஜ்முல் ஹொசைன் சாண்டோ 41 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹசனும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அதன்பின் வந்த அதிரடி வீரர் மஹ்முதுல்லா 2 ரன்களுக்கும், மெஹிதி ஹசன் ரன்கள் ஏதுமின்றியும் பாட் கம்மின்ஸின் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை இழந்தனர். பின்னர் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய தாவ்ஹித் ஹிரிடோயும் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 40 ரன்கள் எடுத்த நிலையில் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 

இந்த விக்கெட்டானது பாட் கம்மின்ஸின் ஹாட்ரிக் விக்கெட்டாகவும் அமைந்தது. இறுதியில் தஸ்கின் அஹ்மத் 13 ரன்களைச் சேர்க்க, வங்கதேச அணியானது 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்களைச் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஆடம் ஸாம்பா 2 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். இதனையடுத்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement