
T20 WC 20th Match: Bangladesh set a target of 125 for England (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று 20ஆவது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து - வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் லிட்டன் தாஸ், முகமது நைம் ஆகியோர் மொயீன் அலி பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் களமிறங்கி முஷ்பிக்கூர் ரஹிம், மஹ்முதுல்லா இணை சிறுது நிலைத்து விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. ஆனால் ரஹீம் 29 ரன்னிலும், மஹ்முதுல்லா 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.