
T20 WC 24th Match: Afghanistan set a target of 148 for Pakistan (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்றுவரும் 24ஆவது லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஹஸ்ரதுல்லா ஸஸாய், முகமது ஷசாத் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அடுத்து வந்த ரஹ்மனுல்லா குர்பாஸ், ஆஸ்கர் ஆஃப்கான், கரிம் ஜானத் ஆகியோர் அதிரடியாக விளையாட முயற்சித்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.