Mohammed nabi
இந்தியாவில் அதிக டி20 ரன்கள்; முகமது நபியின் சாதனையை முறியடித்த ஜோஸ் பட்லர்!
ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் இங்கிலாந்து கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மேனுமான ஜோஸ் பட்லர் 22 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 24 ரன்கள் எடுத்தார். மேலும் அவர் இப்போட்டியில் ரன்களைக் குவிக்க தவறிய போதிலும், ஒரு சிறப்பு சாதனையைப் படைத்துள்ளார்.
அதன்படி இந்தியாவில் அதிக டி20 ரன்கள் எடுத்த வெளிநாட்டு வீரர் என்ற ஆஃப்கானிஸ்தான் அணி வீரர் முகமது நபியின் சாதனையை ஜோஸ் பட்லர் முறியடித்துள்ளார். ஜோஸ் பட்லர் இந்தியாவில் 20 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், மொத்தமாக 563 ரன்களை எடுத்துள்ளார். இதில் நான்கு அரைசதங்களும் அடங்கும். முன்னதாக இந்தப் பட்டியலில், ஆஃப்கானிஸ்தானின் முகமது நபியை இந்திய மண்ணில் 25 போட்டிகளில் மூன்று அரைசதங்களுடன் 556 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on Mohammed nabi
-
ZIM vs AFG, 2nd T20: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ZIM vs AFG, 1st ODI: ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அபார வெற்றி!
ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
ஆஸ்கர் ஆஃப்கானின் முடிவு அதிர்ச்சியாக இருந்தது - முகமது நபி!
ஆஸ்கர் ஆஃப்கானின் முடிவு மிகவும் அதிர்ச்சியளித்ததாக ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: நபி, நைப் பொறுப்பான ஆட்டம்; பாகிஸ்தனுக்கு 148 இலக்கு!
டி20 உலகக்கோப்பை: பாகிஸ்தான் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஃப்கானிடம் சிறந்த பந்துவீச்சாளர்கள் உள்ளார்கள் என்பது உலகம் அறிந்ததே- முகமது நபி!
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்கள் உள்ளார்கள் என்பது உலகம் அறிந்த ஒன்றே என அந்த அணி கேப்டன் முகமது நபி தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: அமீரகம் வந்தடைந்த ரஷித் கான், முகமது நபி!
ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் மற்றும் முகமது நபி ஐக்கிய அரபு அமீரகத்தில் அணியில் இணைந்துவிட்டதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ...
-
கேப்டன்சியிலிருந்து விலகினார் ரஷித் கான்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக ரஷித் கான் அறிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: ரஷித் கான், முகமது நபி விளையாடுவது உறுதி!
ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் ஆஃப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த ரஷித் கான், முகமது நபி இருவரும் விளையாடுவர் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி உறுதிசெய்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24