
T20 WC 29th Match: England beat Sri Lanka by 26 runs (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 29ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், ஜோஸ் பட்லரின் அபாரமான சதத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 163 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 101 ரன்களுடனும் ஆட்டமிழக்காமலும், ஈயான் மோர்கன் 40 ரன்களையும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் வநிந்து ஹசரங்கா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.