Advertisement
Advertisement
Advertisement

டி20 உலகக்கோப்பை: வார்னர், மார்ஷ் காட்டடி; விண்டீஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan November 06, 2021 • 18:56 PM
T20 WC 38th Match: David Warner fire knock helps Australia beat West Indies by 8 wickets
T20 WC 38th Match: David Warner fire knock helps Australia beat West Indies by 8 wickets (Image Source: Google)
Advertisement

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 38ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசியது. 

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், பொல்லார்ட், ரஸ்ஸல் ஆகியோரது இறுதிநேர அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களைச் சேர்த்தது. 

Trending


இதில் அதிகபட்சமாக கீரன் பொல்லார்ட் 44 ரன்களைச் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோஷ் ஹசில்வுட் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் 9 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அதன்பின் ஜோடி சேர்ந்த டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். 

இதில் இருவரும் அரைசதம் கடந்ததோடு, இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதனால் 16.2 பந்துகளிலேயே ஆஸ்திரேலிய அணி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. 

Also Read: T20 World Cup 2021

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் வார்னர் 89 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 53 ரன்களையும் சேர்த்து அசத்தினர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement