
T20 WC 39th Match: South Africa finishes off 189 runs their 20 overs (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 39ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்ரிக்ஸ் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த டி காக் - டுசென் இணை அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டத்து.
இதில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த டி காக் 34 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த் வென்டர் டுசென் அரைசதம் கடந்து அசத்தினார். பின் அவருடன் இணைந்த ஐடன் மார்க்ரமும் சிறப்பாக விளையாட தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்கோர் மளமளவென் உயர்ந்தது.