Advertisement

டி20 உலகக்கோப்பை: பெர்ரிங்டன் அதிரடியில் 165 ரன்கள் குவித்த ஸ்காட்லாந்து!

பப்புவா நியூ கினியா அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan October 19, 2021 • 17:27 PM
T20 WC 5th Match: Berrington Powers Scotland To 165/9 Against Newbies Papua New Guinea
T20 WC 5th Match: Berrington Powers Scotland To 165/9 Against Newbies Papua New Guinea (Image Source: Google)
Advertisement

டி20 உலகக்கோப்பை தொடரின் 5ஆவது தகுதிச்சுற்றுப் போட்டியில் ஸ்காட்லாந்து - பப்புவா நியூ கினியா அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

அதன்படி களமிறங்கிய தொடக்க வீரர்கள் கொட்சர் 6 ரன்னிலும், முன்சி 15 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

Trending


அதன்பின் ஜோடி சேர்ந்த கிராஸ் - பெர்ரிங்டன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் கிராஸ் 45 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, மறுமுனையிலிருந்த பெர்ரிங்டன் அரைசதம் கடந்தார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக பெர்ரிங்டன் 70 ரன்களைச் சேர்த்தார். எதிரணி தரபில் கபுவா மோரியா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement