டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணியில் அகீல் ஹுசைன் சேர்ப்பு!
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஃபேபியன் ஆலனுக்குப் பதிலாக அகீல் ஹுசைன் தேர்வாகியுள்ளார்.

ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் லீக் போட்டிகள் கடந்த 17ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. மேலும் இத்தொடரின் சூப்பர் 12 லீக் போட்டிகள் 23ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன.
இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில், டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஃபேபியல் ஆலன் இடம்பெற்றிருந்தார்.
எனினும் காயம் காரணமாக அவரால் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து அவருக்கு மாற்று வீரராக சுழற்பந்து வீச்சாளர் அகீல் ஹுசைன், வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ஏற்கெனவே ரிசர்வ் வீரராக வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற்றிருந்த அகீல் ஹுசைன், 9 ஒருநாள், 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் ரிசர்வ் வீரராக 26 வயது குடகேஷ் மோட்டீ வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now