
T20 WC: Dhoni gives throwdowns to India batters as team gears up for Pakistan clash (Image Source: Google)
இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடரானது, கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரக, ஓமனில் நடைபெற்று வருகிறது.
இதில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய அணி, வருகிற 24ஆம் தேதி அன்று பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதற்காக இருநாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பயிற்சியின் போது பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசினார்.