
T20 WC: Finch hails 'terrific' Adam Zampa following Australia's win (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசியது.
அதன்படி முதலில் விளையாடிய இலங்கை அணி 155 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணி வார்னர், ஃபிஞ்சின் அதிரடியான ஆட்டத்தினால் 17 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச்,“இது ஒரு நல்ல போட்டியாக இருந்தது. தொடக்கத்தில் இலங்கை வீரர்கள் சிறப்பாக விளையாடினர். ஆனல் ஆடம் ஸாம்பா தனது பந்துவீச்சில் அவர்களைக் கட்டுப்படுத்தினார்.