
துபாயில் நேற்று நடந்த டி20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை முதல் முறையாகக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி.
ஆஸ்திரேலிய அணியில் ஹேசல்வுட், ஆடம் ஸம்பா இருவர் மட்டுமே கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். அதிலும் ஹேசல்வுட் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கடந்த மாதம் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணியில் ஹேசல்வுட் இருந்ததால், அந்த அணியில் கிடைத்த பெரிய அனுபவங்கள் அவரைச் சிறப்பாகப் பந்தவீசத் துணைபுரிந்துள்ளன.
ஹேசல்வுட் அனுபவம் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் கூறுகையில், ''எங்களின் பந்துவீச்சுக் குழுவில் ஹேசல்வுட் முக்கியமான நபர். சிஎஸ்கே அணியில் தனக்குக் கிடைத்த அனுபவங்களை எல்லாம் எங்களிடம் ஹேசல்வுட் பகிர்ந்துகொண்டார். அதிலும் குறிப்பாக இறுதிப் போட்டியில் எவ்வாறு பந்து வீசுவது, விக்கெட்டுகளை வீழ்த்துவது முக்கியம் என்பதை உணர்ந்து லைன் லென்த்தில் எவ்வாறு வீசுவது என்பதை எங்களிடம் ஹேசல்வுட் பகிர்ந்துகொண்டார்.