
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17ஆம் தேதி முதல் டி20 உலகக் கோப்பை தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று முடிந்த வேளையில் தற்போது இன்று முதல் சூப்பர் 12-சுற்றுப்போட்டிகள் ஆரம்பித்துள்ளன.
இதில் முதல் போட்டியாக தற்போது தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. இந்நிலையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நாளை நடைபெற உள்ள முக்கியமான போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதவுள்ளன.
பொதுவாகவே இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால் பெரிய வரவேற்பு இருக்கும். அதிலும் தற்போது உலக கோப்பை போட்டியில் இவ்விரு அணிகளும் ஒரே பிரிவில் மோதுவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறப்போவது யார் ? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.