
T20 WC: Ravi Rampaul earns recall as West Indies announce squad; Gayle included but Narine left out (Image Source: Google)
நடப்பாண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளதால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதிலும் ஒவ்வொரு நாடும் தங்கள் அணியை அறிவித்துள்ளது ரசிகர்களில் ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட முக்கிய அணிகள் தங்கள் அணியை அறிவித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
இந்நிலையில், இருமுறை டி20 உலகக்கோப்பையை வென்ற அணியும், நடப்பு சாம்பியனுமான வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியாம் அறிவித்துள்ளது.