
T20 WC Semi Final: Moeen Ali's Fifty helps England Finishes off 166 on their 20 overs (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி அபுதாபியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதாலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லர் - ஜானி பேர்ஸ்டோவ் இணை தொடக்கம் தந்தது.
இதில் பேர்ஸ்டோவ் 13 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 29 ரன்னில் ஜோஸ் பட்லரும் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் மாலன் - மொயின் அலி இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.