
T20 World Cup 2021: Australia Beat Bangladesh By 8 Wickets (Image Source: Google)
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 34ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணி ஆடம் ஸாம்பாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 15 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 74 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் ஆடம் ஸாம்பா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.