T20 World Cup 2021 - Sri Lanka Beat West Indies By 20 Runs (Image Source: Google)
டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 35ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் நிசங்கா அரை சதமடித்து 51 ரன்னில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய அசலங்கா 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. நிகோலஸ் பூரன் 46 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர். ஹெட்மையர் ஓரளவு தாக்குப்பிடித்தார். அவர் இறுதிவரை போராடி 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.