Advertisement
Advertisement
Advertisement

டி20 உலகக்கோப்பை: கான்வே அதிரடி; ஆஸிக்கு 201 டார்கெட்!

டி20 உலக கோப்பையில் முதல் சூப்பர் 12 சுற்று போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதலில் பேட்டிங் விளையாடிய நியூசிலாந்து அணி 200 ரன்களை குவித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan October 22, 2022 • 15:05 PM
T20 World Cup 2022: Conway Powers New Zealand To 200/3 Against Australia In Super 12 Match
T20 World Cup 2022: Conway Powers New Zealand To 200/3 Against Australia In Super 12 Match (Image Source: Google)
Advertisement

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் ஆடிவருகின்றன. சிட்னியில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன் மற்றும் டெவான் கான்வே ஆகிய இருவரும் களமிறங்கினர். அதிரடியாக ஆடிய ஃபின் ஆலன் 16 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 42 ரன்களை விளாசினார். 

Trending


கேப்டன் கேன் வில்லியம்சன் 23 பந்தில் 23 ரன்கள் மட்டுமே அடித்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த டெவான் கான்வே அதன்பின்னர் அடி  வெளுத்து வாங்கினார். கிளென் ஃபிலிப்ஸ் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். டெவான் கான்வேவும் ஜிம்மி நீஷமும் இணைந்து டெத் ஓவர்களில் அடித்து ஆடி ஸ்கோரை  மேலும் உயர்த்தினர்.

ஜிம்மி நீஷம் 13 பந்தில் 26 ரன்கள் அடித்தார். அபாரமாக பேட்டிங் ஆடி சதத்தை நெருங்கிய டெவான் கான்வே 58 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 92 ரன்களை குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காதபோதிலும், அவரால் சதத்தை எட்டமுடியவில்லை. 20 ஓவரில் 200 ரன்களை குவித்த நியூசிலாந்து அணி, ஆஸ்திரேலியாவிற்கு கடின இலக்கை நிர்ணயித்துள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement