-mdl.jpg)
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பிரிஸ்பேனில் இன்று சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் குரூப் 1இல் அங்கம் வகிக்கும் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் , அலெக்ஸ் ஹேல்ஸ் களமிறங்கினர். தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடினார். குறிப்பாக அலெக்ஸ் ஹாலெஸ் பந்துகளை நாலாபுறமும் பவுண்டரிக்கு பறக்க விட்டார்.
சிறப்பாக விளையாடிய அவர் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் சான்ட்னர் பந்துவீச்சில் 52 ரன்களில் வெளியேறினார். பின்னர் ஜோஸ் பட்லர் அதிரடியை தொடர்ந்தார். நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட பட்லர் அரைசதம் கடந்து அசத்தினார்.