டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: சாம் கரண், ஆதில் ரஷித் அபாரம்; இங்கிலாந்துக்கு 138 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 138 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் மெல்போர்ன் மைதானத்தில் இன்று இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் ஃபீல்டிங் செய்வதாக தீர்மானித்து பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
Trending
அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக பாபர் ஆசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இணை களமிறங்கியது. இருவரும் அதிரடியாக இன்னிங்ஸைத் தொடங்கினாலும் முதல் சில ஓவர்களிலேயே தடுமாற தொடங்கினர். இதன் விளைவாக 15 ரன்கள் எடுத்திருந்த முகமது ரிஸ்வான் சாம் கரன் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் களமிறங்கிய முகமது ஹாரிஸ் அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆதில் ரஷித் வீசிய முதல் பந்திலேயே தூக்கி அடிக்க முயற்சித்து பென் ஸ்டோக்ஸிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்களோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவரைத்தொடர்ந்து கேப்டன் பாபர் ஆசாமும் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆதில் ரஷித் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதனைத்தொடர்ந்து வந்த இஃப்திகார் அஹ்மத் ரன் ஏதுமின்றி பென் ஸ்டோக்ஸிடம் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஷான் மசூத் - சதாப் கான் இணை ஓரளவு சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.
ஆனால் 38 ரன்களில் ஷான் மசூதும், 20 ரன்கைள் சதாப் கானும் அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டை இழக்க, பாகிஸ்தான் அணியின் ரன் வேகமும் குறைந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை மட்டுமே எடுத்தது.
இங்கிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய சாம் கரண் 4 ஓவர்களில் 12 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும் ஆதில் ரஷித் மற்றும் கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
Win Big, Make Your Cricket Tales Now