Advertisement

டி20 உலகக்கோப்பை: அரையிறுதியில் பணியாற்றும் நடுவர்களின் விவரம்!

டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிச்சுற்றில் பணியாற்றும் நடுவர்களின் விவரத்தை ஐசிசி வெளியிட்டுள்ளது.

Advertisement
T20 World Cup 2022: Kumar Dharmasena, Paul Reiffel To Be On-Field Umpires For India-England Semifina
T20 World Cup 2022: Kumar Dharmasena, Paul Reiffel To Be On-Field Umpires For India-England Semifina (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 08, 2022 • 10:59 AM

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுகளின் முடிவில் இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இதையடுத்து இந்திய அணி நவம்பர் 10ஆம் தேதி நடக்கவுள்ள அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அதேபோல், முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan
November 08, 2022 • 10:59 AM

இந்நிலையில், இந்திய அணி விளையாடும் அரையிறுதி போட்டியில் பணியாற்றவுள்ள நடுவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி குமார் தர்மசேனா மற்றும் பால் ரீபெல் ஆகியோர் கள நடுவர்களாகவும், கிறிஸ் கேவ்னி மூன்றாவது நடுவராகவும் செயல்பட உள்ளனர். நான்காவது நடுவராக ராட் டக்கர் செயல்படுவார். டேவிட் பூன் போட்டி நடுவராக  இருப்பார்.

Trending

அதேபோல், சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள நியூசிலாந்து, பாகிஸ்தான் இடையிலான அரையிறுதியில் மரைஸ் எராஸ்மஸ் மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் கள நடுவராகவும், ரிச்சர்ட் கெட்டில்பரோ மூன்றாவது நடுவராகவும் செயல்பட உள்ளனர். மைக்கேல் கோக் நான்காவது நடுவராகவும் மற்றும் கிறிஸ் பிராட் போட்டி நடுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement