டி20 உலகக்கோப்பை : ஆஸ்திரேலியா புறப்படும் முகமது ஷமி!
டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் பும்ரா காயம் காரணமாக விலகிய நிலையில், மாற்று வீரராக முகமது ஷமி அறிவிக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.
முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்கா டி20 தொடரிலிருந்து விலகினார் பும்ரா. அதேநேரம் டி20 உலகக் கோப்பை அணியிலும் இவரிடம் பெற்றிருப்பதால் அதிலும் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற சந்தேகங்கள் எழுந்து வந்தது. கடந்த அக்டோபர் மூன்றாம் தேதி வெளியான முழு மருத்துவ பரிசோதனை அறிக்கையில் பும்ராவிற்கு காயம் தீவிரமாக இருக்கிறது. அவரால் இன்னும் ஓரிரு மாதங்கள் விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் டி20 உலக கோப்பை தொடரிலிருந்து பும்ரா விலகுகிறார் என அதிர்ச்சிகரமான தகவலை பிசிசிஐ வெளியிட்டது. இந்நிலையில் ஏற்கனவே டெத் ஓவர்களில் மோசமாக செயல்பட்டு வரும் இந்திய அணிக்கு பும்ரா இல்லாதது இன்னும் கூடுதல் பின்னடைவாக அமைந்திருக்கிறது. இந்தியா உலகக்கோப்பை ரிசர்வ் வரிசையில் முகமது சமி மற்றும் தீபக் சகர் ஆகிய 2 வேகப்பந்துவீச்சாளர்களை கொண்டிருக்கிறது. இதில் ஒருவர் மாற்று வீரராக அறிவிக்கப்படலாம் என தொடர்ந்து பேசப்பட்டு வந்தது.
Trending
பும்ரா இல்லாததால், ஆஸ்திரேலியாவில் பந்துவீசிய அனுபவம் கொண்டு வீரராக முகமது ஷமி விளங்குகிறார். பும்ராவை போல வேகம், பந்தை ஸ்விங் செய்வது என பல அட்டகாச திறமை இருந்தாலும், அவரை டி20 கிரிக்கெட்டில் கடந்த ஒரு ஆண்டாக பிசிசிஐ சேர்க்காமல் விட்டது.
இதனையடுத்து, தென் ஆப்பிரிக்க தொடரில் அவரை சேர்த்து பிசிசிஐ பரிசோதிக்க எண்ணியது. ஆனால், அவர் கரோனவால் பாதிக்கப்பட்டு தொடரிலிருந்து வெளியேறினார். இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் முகமது ஷமி பயிற்சி செய்து வந்தார்.
தற்போது அவருக்கு உடல் தகுதி சோதனை நடைபெற்றது. இதில் முகமது ஷமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஷமி, சிராஜ் மற்றும் பிஸ்னாய் என மூன்று பேரும் நாளை ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு செல்ல உள்ளனர். இதில் முகமது ஷமி வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
இதில் முகமது ஷமி எப்படி செயல்படுகிறார் என்பதை பொருட்டு, அவர் பும்ராவுக்கு பதில் விளையாடுவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இல்லையேனில் முகமது சிராஜ்க்கு தான் வாய்ப்பு கிடைக்கும். தென்னாப்பிரிக்காவுக்குஎதிரான ஒருநாள் தொடரில் சிராஜ் சிறப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தியதோடு, விக்கெட்டும் எடுத்தார்.
இதனால் தொடர் நாயகன் விருதும் முகமது சிராஜ்க்கு தரப்பட்டது. இந்த நிலையில், முகமது சிராஜே பும்ராவுக்கு பதில் சரியான தேர்வாக இருக்கும் என்று தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஸ்டேயின் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சிராஜ் டெஸ்ட் போட்டியில் நன்றாக விளையாடிய அனுபவத்தை பெற்றுள்ளார். தொடர்ந்து விளையாடி கொண்டு இருப்பதால் அவரை சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now