Advertisement

டி20 உலகக்கோப்பை: நமீபியாவுக்கு 149 ரன்களை இலக்காக நிர்ணயித்தது யுஏஇ!

டி20 உலகக்கோப்பை: நமீபியாவுக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் யுஏஇ அணி 149 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan October 20, 2022 • 15:04 PM
T20 World Cup 2022: Namibia restrict UAE to 148/3 in 20 overs
T20 World Cup 2022: Namibia restrict UAE to 148/3 in 20 overs (Image Source: Google)
Advertisement

டி20 உலகக்கோப்பை தொடரின் 8ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்றில் நுழைவதற்காக தரவரிசையில் கடைசி எட்டு இடங்களில் இருக்கும் அணிகள் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன. 

அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெறும் 10ஆவது போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ)- நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள யுஏஇ அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

Trending


அதன்படி களமிறங்கிய யுஏஇ அணியின் தொடக்க வீரர்கள் முகமது வாசிம் - விருத்யா அரவின் இணை நிதானமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் விருத்யா 21 ரன்களோடு வெளியேற மறுமுனையில் இருந்த முகமது வாசிம் அரைசதம் கடந்து அசத்தினார். 

அவருக்கு துணையாக களமிறங்கிய கேப்டன் ரிஸ்வானும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரும் சிறுக சிறுக உயர்ந்தது. அதன்பின் அரைதம் கடந்திருந்த வாசிம் மேற்கொண்டு எந்த ரன்களும் சேர்க்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். 

அவரைத் தொடர்ந்து வந்த அலிஷான் ஷராஃபு 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதில் ரிஸ்வான், பசில் ஹமீத் இணை அடுத்தடுத்து பவுண்டரி சிக்சர்கள் என விளாசி ஸ்கோரை உயர்த்தினர். 

இதன்மூலம் யுஏஇ அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களைச் சேர்த்து அசத்தியது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிஸ்வான் 43 ரன்களையும், ஹமீத் 25 ரன்களையும் சேர்த்தனர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement