
பாகிஸ்தான அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அஃப்ரிடி காயம் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் முழு உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஷாஹீன் அஃப்ரிடி குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகிறது. எதிர்பார்த்தபடியே ஷாஹீன் அஃப்ரிடி உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் வெற்றி பெற்று வருகிறார். இதனால் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பு அவர் தயாராகி விடுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் திட்டமிட்டபடி வரும் 23ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் ஷாஹீன் அqப்ரிடி பங்கேற்பார் என தெரிகிறது. ஷாஹீன் அஃப்ரிடி தனது அசுர வேகப் பந்துவீச்சால் ரோகித் சர்மா கேஎல் ராகுல் ஆகியோரின் விக்கெட்டை கடந்த டி20 உலக கோப்பை தொடரில் வீழ்த்தினார். இதுவே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.