
டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு 8 முன்னணி அணிகள் நேரடியாக தகுதிபெற்ற நிலையில், எஞ்சிய 4 அணிகளை தீர்மானிக்க 8 அணிகள் கலந்துகொண்டு தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடின.
தகுதிச்சுற்று போட்டியில் குரூப் ஏ-விலிருந்து இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறின. குரூப் பி-யிலிருந்து அயர்லாந்து அணி முன்னேறிவிட்ட, இந்த க்ரூப்பிலிருந்து 2வது அணியை தீர்மானிக்கும் போட்டி ஜிம்பாப்வே - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நடந்துவருகிறது.
ஹோபர்ட்டில் நடந்துவரும் இந்த போட்டியில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணியின் தொடக்க வீரர் ஜார்ஜ் முன்சி ஒரு முனையில் நிலைத்து நின்று பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் மறுமுனையில் மற்றவீரர்கள் சோபிக்கவில்லை.