எந்த அணி உலகக்கோப்பையை கைப்பற்றும் - பிராட் ஹாக் பதில்!
டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் கருத்து தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கிறது. டி20 உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன.
இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்படுகின்றன. உலக கோப்பை நடக்கும் ஐக்கிய அரபு அமீரக கண்டிஷன் பாகிஸ்தானுக்கு நன்கு பழக்கப்பட்டது என்பதால் அந்த அணியும் சிறப்பாக ஆடும் என்றும் மதிப்பிடப்படுகிறது.
இந்நிலையில், முன்னாள் வீரர்கள் பலரும் டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும், எந்த அணி கோப்பையை வெல்லும் என தங்களது கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
அந்தவகையில், இதுதொடர்பான ரசிகர் ஒருவரின் கேள்விக்கு டுவிட்டரில் பதிலளித்த பிராட் ஹாக், “நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகளும் டி20 கிரிக்கெட்டில் அருமையாக ஆடிவருகின்றன. அந்த 2 அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லும் என நினைக்கிறேன். இந்த 2 அணிகளுக்கும் சவால் விடுக்கும் ஒரு அணி என்றால், அது இந்தியா தான்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now