
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு மாற்று வீரர் யார் என்பது குறித்து இந்திய அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. சமீபகாலமாக தீபக் சஹார் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தீபக் சஹார் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கினார்.
இதனால் தீபக் சஹாரை அணியில் கொண்டு வர வேண்டும் என பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும் வலியுறுத்தினர். இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தீபச் சஹார், ஆவேஸ் கான், முகமது சிராஜ் என மூன்று வீரர்களும் இடம் பெற்றனர். இதில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களுக்கு பும்ராவின் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முதல் ஒருநாள் போட்டியில் தீபக் சஹார் இடம் பெறவில்லை. தொடர்ந்து டி20 போட்டி விளையாடி வருவதால் தீபக் சஹாருக்கு ஓய்வு வழங்கப்பட்டு இருக்கலாம் என நினைக்கப்பட்டது. ஆனால் பயிற்சியில் ஈடுபடும் போது தீபக் சஹார் காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது.