
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி மோசமான பேட்டிங்கில் 151 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது இந்திய அணிக்கு தோல்வியுடன் சேர்த்து பெரும் பின்னடைவும் வந்துள்ளது. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, பவுண்டரிகளை தொடர்ந்து அடித்து வந்தார். ஆனால் திடீரென பவுன்சர் பந்து ஒன்று அவரின் தோள்பட்டையில் பட்டு காயத்தை ஏற்படுத்தியது. இதனால் வலித்தாங்க முடியாமல் தவித்த பாண்டியாவை உடனடியாக ஸ்கேன் எடுப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இது ஒருபுறம் இருக்க இந்திய அணிக்கு அடுத்ததாக மிக முக்கிய போட்டி உள்ளது. வரும் அக்டோபர் 31ஆம் தேதியன்று நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெற்றால் தான் அரையிறுதி வாய்ப்பு என்பது பிரகாசமாகும். எனவே இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா களமிறங்குவாரா, அல்லது அவரின் காயத்தினால் வெளியேற்றப்படுவாரா என்ற குழப்பம் நீடித்து வருகிறது.