Advertisement

டி20 உலகக்கோப்பை: பந்துவீச்சு பயிற்சியில் ஹர்திக் பாண்டியா!

தோள்பட்டை அறுவை சிகிச்சைக்குப்பின் பந்துவீசாமல் தவிர்த்துவந்த ஹர்திக் பாண்டியா பல மாதங்களுக்குப்பின் நேற்று பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 28, 2021 • 11:25 AM
T20 World Cup: Hopeful Signs For India As Hardik Pandya Starts Bowling In The Nets
T20 World Cup: Hopeful Signs For India As Hardik Pandya Starts Bowling In The Nets (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோள்பட்டையில் பந்துபட்டதால், காயமடைந்திருப்பாரோ என்ற அச்சத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. ஆனால், ஹர்திக் பாண்டியாவுக்கு எந்த காயமும் இல்லை எனத் தெரியவந்ததையடுத்து வரும் 31ஆம் தேதி நடக்கும் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட முழு உடற்தகுதியுடன் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வரும் 31ஆம் தேதி நடக்கும் நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டம் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். வாழ்வா சாவா என்ற ரீதியில் இருக்கும் இந்த ஆட்டத்தில் வென்றால்தான் இந்திய அணி அரையிறுதிக்குச் செல்லும் இல்லாவிட்டால், போட்டித் தொடரிலிருந்து வெளியேறிவிடும்.

Trending


இந்திய அணியில் ஸ்பெலிஸ்ட் பேட்ஸ்மேனாகவே ஹர்திக் பாண்டியா தொடர்வது அணிக்குள் 6-வது பந்துவீச்சாளரைச் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது. அணி வீரர்கள் தேர்விலும் சமநிலையற்ற தன்மை நிலவியது. இதையடுத்து, அவரை பந்துவீசி பயிற்சி எடுக்க அறிவுறுத்தப்பட்டது

ஐபிஎல் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஹர்திக் பாண்டியா, ஒரு போட்டியில்கூட பந்துவீசவில்லை. இந்தச் சூழலில் அணியில் கூடுதலாகப் பந்துவீச்சாளரைச் சேர்ப்பதற்கு பதிலாக ஹர்திக் பாண்டியா 2 ஓவர்களை வீசினால் அணியில் 6ஆவது பந்துவீச்சாளரைச் சேர்க்கத் தேவையில்லை என்ற ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, ஹர்திக் பாண்டியாவை பந்துவீச பயிற்சி அளிக்கப்பட்டது.

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

அணியின் ஆலோசகர் மகேந்திர சிங் தோனி, உடற்பயிற்சி வல்லுநர் நிதின் படேல், பயிற்சியாளர் சோகும் தேசாய் ஆகியோர் முன்னிலையில் ஹர்திக் பாண்டியா பந்துவீசினார். தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஆலோசகர் தோனி ஆகியோர் ஹர்திக் பாண்டியாவின் பயிற்சியை உன்னிப்பாகக் கவனித்தனர். ஏறக்குறைய 20 நிமிடங்கள் ஹர்திக் பாண்டியா பந்துவீசி பயிற்சி எடுத்தார். இது தவிர பந்துவீசிப் பயிற்சி எடுத்து முடித்ததும், ஹர்திக் பாண்டியாவுக்கு பந்தை எறிந்து பயிற்சி எடுத்தலும் அளிக்கப்பட்டது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement