இந்தியா vs வங்கதேசம், சூப்பர் 12 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2இல் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு அடிலெய்டில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.
டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று குரூப் 2 பிரிவில் 2ஆவது இடத்தில் உள்ளது. அடுத்தடுத்து வெற்றியுடன் தொடரை தொடங்கிய இந்திய அணி, வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பெர்த் ஆடுகளத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது. வங்கதேசத்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடி உத்வேகம் பெற முயற்சிக்கக்கூடும்.
இந்திய அணியின் தொடக்க வீரரான கேஎல் ராகுல் 3 ஆட்டங்களில் 22 ரன்களே சேர்த்துள்ள போதிலும் அணி நிர்வாகம் அவருக்கு ஆதரவாக உள்ளது. மேலும் பலம் குறைந்த வங்கதேச அணிக்கு எதிராக கேஎல் ராகுல் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தி பார்முக்கு திரும்பக்கூடும் என அணி நிர்வாகம் நம்பிக்கை கொண்டுள்ளது. ஏனெனில் முஸ்தாபிசூர் ரஹ்மான், தஸ்கின் அகமது, மெஹிதி ஹசன் மிராஜ், ஷகிப் அல் ஹசன், ஹசன் மஹ்மூத் ஆகியோரை உள்ளடக்கிய வங்கதேச அணியின் பந்து வீச்சுத்துறை தாக்கத்தை ஏற்படுத்திக் கூடிய அளவிலான உலகத்தரத்தில் இல்லை.
Trending
இதனால் இன்றைய ஆட்டத்தை கேஎல் ராகுல் சரியாக பயன்படுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டக்கூடும். கடந்த ஆட்டத்தில் காயம் அடைந்த தினேஷ் கார்த்திக் முழு உடற்தகுதியை எட்டவில்லை. இதனால் அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் களமிறங்கக்கூடும். மேலும் தீபக் ஹூடா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சை பலப்படுத்தும் விதமாக யுவேந்திர சாஹலுக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும். ஏனெனில் வங்கதேச அணி சுழற்பந்து வீச்சில் திணறக்கூடியது. 2021ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அந்த அணி ரிஸ்ட் சுழலில் 54 விக்கெட்களை தாரை வார்த்துள்ளது. இதனால் யுவேந்திர சாஹல் சவால் தரக்கூடும்.
அதேசமயம் வங்கதேச அணி 3 போட்டிகளில் விளையாடி இரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. வெற்றி பெற்ற இரு ஆட்டங்களிலும் கூட பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் வங்கதேச அணியின் பேட்ஸ்மேன்கள் ரன்கள் சேர்க்க தடுமாறினர். 3 ஆட்டங்களிலும் சேர்த்து அந்த அணியில் உள்ள பேட்ஸ்மேன்களில் தொடக்க வீரரான நஜ்முல் ஹொசைன் மட்டுமே 100 ரன்களை எட்டியுள்ளார். அவரைத் தொடர்ந்து அஃபிஃப், மொசடக் ஹோசைன் ஆகியோரை நம்பியேஅணியின் பேட்டிங் உள்ளது.
கேப்டன் ஷகிப் அல் ஹசன் பேட்டிங்கில் பார்மின்றி தவிப்பது பலவீனத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. பந்து வீச்சிலும் அவர், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் வங்கதேச அணியின் பலவீனங்களை இந்திய வீரர்கள்பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கக்கூடும். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இந்திய அணி பலப்படுத்திக் கொள்ள முடியும்.
மேலும் இன்றைய போட்டி நடைபெறும் அடிலெய்ட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் போட்டி கைவிடப்படக்கூடிய அளவுக்கு மழை பொழிவு இருக்காது என ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர்.
உத்தேச அணி
இந்தியா: ரோஹித் சர்மா(கே), கேஎல்ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா/அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
வங்கதேசம்: நஜ்முல் ஹொசைன் சாண்டோ, சௌமியா சர்க்கார், லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன்(கே), அஃபிஃப் ஹொசைன், யாஷிர் அலி, நூருல் ஹசன், மொசாடெக் ஹொசைன், முஸ்தாபிசூர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், தஸ்கின் அகமது.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - நூருல் ஹசன்
- பேட்டர்ஸ் – விராட் கோலி, நஜ்முல் ஹொசைன் சாண்டோ, சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல்
- ஆல்ரவுண்டர்கள் - ஹர்திக் பாண்டியா, ஷாகிப் அல் ஹசன்
- பந்துவீச்சாளர்கள் - அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர் குமார், தஸ்கின் அகமது, முகமது ஷமி
*This fantasy XI is based on the understanding, analysis, knowledge, and instinct of the writer. While making your prediction, consider the points mentioned, and make your own decision.
Win Big, Make Your Cricket Tales Now