
டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடந்த இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
இதில் 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி ஏய்டன் மார்க்ரமின் 52 ரன்கள் மற்றும் டேவிட் மில்லரின் 59 ரன்களுடன் 19.4 ஓவர்களிலேயே 5 விக்கெட்டை இழந்து எட்டி வெற்றிபெற்றது.
முன்னதாக, இந்தப் போட்டியின் போது இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் முதுகில் காயம் அடைந்தார். ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்சின் 15ஆவது ஓவரின் முடிவின்போது தினேஷ் கார்த்திக் முதுகுவலியால் அவதிப்பட்டார். அணியின் பிசியோ உடனடியாக வந்து அவரை பரிசோதித்தார். முடிவில் மைதானத்தில் இருந்து தினேஷ் கார்த்திக் வெளியேறினார். அவரது காயத்தின் சரியான தன்மை குறித்து சொல்லப்படவில்லை.