இறுதி போட்டியில் 100 சதவீத திறமையை வெளிப்படுத்த வேண்டும் - பாபர் ஆசாம்
நாங்கள் எப்போதும் சவால்களை முறியடிக்க முயற்சி செய்வோம். இறுதிப் போட்டியில் நெருக்கடி இருக்கத்தான் செய்யும் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று இந்தியா- இங்கிலாந்து அணிகள் 2ஆவது அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி பாகிஸ்தானுடன் சாம்பியனுக்கு போட்டியிடும்.
நியூசிலாந்து அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் பாபர் ஆசம்- முகமது ரிஸ்வான் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12.4 ஓவரில் 105 ரன்கள் சேர்க்க, பாகிஸ்தான் 153 இலக்கை 19.1 ஓவரில் எட்டியது.
Trending
இன்றைய போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்று பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்த வெண்டும் என கோடான கோடி ரசிகர்கள் விரும்புகின்றனர்.
இந்த நிலையில், நேற்றைய போட்டிக்குப்பின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் ''நீங்கள் சிறந்த முறையில் தோல்வியில் இருந்து மீண்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளீர்கள். இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியுன் என்பதற்கான சாத்தியக்கூறு உள்ளது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியும். இதுபோன்ற போட்டிகளில் நாம் அடிக்கடி நெருக்கடிக்கு உள்ளாகிறோம். இதுபோன்ற சூழ்நிலையில் உங்களுடைய திட்டம் என்ன?'' என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த பாபர் ஆசாம் ''இறுதிப் போட்டியில் நம்முடன் மோதுவது யார் என்பதை தற்போது சொல்ல இயலாது. எந்த அணி வருவது என்பது விஷயம் அல்ல. நாங்கள் எங்களுடைய 100 சதவீத திறமையை வெளிப்படுத்த முயற்சி செய்வோம். நாங்கள் எப்போதும் சவால்களை முறியடிக்க முயற்சி செய்வோம். இறுதிப் போட்டியில் நெருக்கடி இருக்கத்தான் செய்யும்.
இந்த தொடரில் நாக்அவுட் சுற்றுக்கே முன்னேற முடியாத நிலை போன்ற நிலைகளை கடந்துதான் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளோம். இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிட்டால், நீங்கள் பயமில்லாத ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டம். இதுபோன்ற ஆட்டத்தைத்தான் நாங்கள் 3-4 போட்டிகளில் விளையாடியுள்ளோம். அதை அப்படியோ தொடர் பார்ப்போம்'' என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now