
முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தான் vs ஆஃப்கனிஸ்தன் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
AFG vs PAK Final T20I, Cricket Tips: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கு தயாராகும் வகையில், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் அணிகள் யுஏஇ அணியுடன் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகின்றன.
இந்த முத்தரப்பு டி20 தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் முன்னேறியுள்ளன. நாளை நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் இரு அணிளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மேலும் இந்த போட்டியானது ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே இந்த தொடரில் இரு அணிகளும் மோதிய லீக் போட்டிகளில் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ளனர். இதனால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரிதுள்ளன.