
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 16ஆவது போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சான் மசூத் 52 ரன்களும், இஃப்திகார் அஹமத் 51 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அர்ஸ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா அகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன்பின் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா (4), கே.எல் ராகுல் (4), சூர்யகுமார் யாதவ் (13), அக்ஷர் பட்டேல் (2) போன்றோர் ஏமாற்றம் கொடுத்தாலும், 5வது விக்கெட்டிற்கு கூட்டணி சேர்ந்த ஹர்திக் பாண்டியா – விராட் கோலி ஜோடி பொறுப்பான பேட்டிங்கின் மூலம் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது.