சூர்யகுமார் வேண்டாம்; இந்த வீரருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
உலகக்கோப்பை இந்திய அணியில் சூரியகுமாருக்கான வாய்ப்பு பற்றி பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் மிக வெளிப்படையாக சூர்யகுமார் வேண்டாம் என்கின்ற தன் கருத்தை முன் வைத்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு அணியை அறிவிப்பதற்கான கடைசி நாள் நாளை ஆகும். பங்கேற்க இருக்கும் 10 அணிகளில் ஒன்பது அணிகள் தங்களது அணியை அறிவித்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையில் அணியை அறிவிக்காத ஒரே அணி நிர்வாகமாக உலகக் கோப்பை தொடரை நடத்தும் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம்தான் இருந்து வருகிறது. முன்னணி வீரர்களின் காயம் உலகக் கோப்பை இந்திய அணியை இறுதி செய்வதில் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்திற்கு சிக்கலை கொடுத்து வந்தது.
இந்த நிலையில் நாளை எப்படியும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அணியை வெளியிட்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் இருந்து வருகிறது. இதனால் நாளை யார் உலகக் கோப்பை இந்திய அணியில் இருப்பார்கள் என்பது தெரிய வந்துவிடும். இதில் இந்திய அணிக்கு ஒரு சாதகமான விஷயமாக தேசிய கிரிக்கெட் அகாடமி நேற்று கே எல் ராகுல் முழுமையாக உடல் தகுதியை எட்டி விட்டதாக அறிக்கை வெளியிட்டு இருந்தது. மிடில் வரிசையில் கீழே விளையாடுவார் மேலும் விக்கெட் கீப்பிங் செய்வார். என்பதால் இவருடைய தேவை அணிக்கு நிறையவே இருக்கிறது. எனவே இந்திய அணி நிர்வாகத்திற்கு இது நிம்மதி அளிக்கக் கூடிய தகவல்.
Trending
இந்த நிலையில் மாற்று பேட்ஸ்மேனாக உலகக்கோப்பை இந்திய அணிகள் இடம்பெறுவதற்கான அதிகபட்ச வாய்ப்பில் தற்போது சூர்யகுமார் யாதவ்தான் இருந்து வருகிறார். அதிரடி பேட்டிங் மூலம் போட்டியில் தாக்கத்தை செலுத்தக்கூடிய வீரர் என்பதால் இவருக்கு இந்த வாய்ப்பை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் வழங்க விரும்புவதாகவே தெரிகிறது. இவருக்கு 15 பேர் கொண்ட அணியில் இடம் இருக்கும். ஆனால் 11 பேர் கொண்ட விளையாடும் அணியில் இடம் கிடைப்பது கொஞ்சம் கடினமே.
தற்பொழுது உலகக்கோப்பை இந்திய அணியில் சூரியகுமாருக்கான வாய்ப்பு பற்றி பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் மிக வெளிப்படையாக சூர்யகுமார் வேண்டாம் என்கின்ற தன் கருத்தை தைரியமாக முன் வைத்து பேசி இருக்கிறார்.
இதுகுறித்து பேசியஅவர், “சூர்யகுமார் யாதவா? இல்லை திலக் வர்மாவா? என்பது தேர்வு செய்வதில் மிகவும் கடினமான ஒரு வேலை. திலக் வர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை விளையாடாமல் இருந்தாலும் கூட நான் அவரையே தேர்வு செய்வேன். ஏனென்றால் அவர் எப்படி பேட்டிங் செய்கிறார் என்பதை பார்க்கும் பொழுது அவர் 50 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு மிகவும் சரியாக இருப்பார் என்று தெரிகிறது.சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் நிறைய ஆற்றலையும் வாக்குறுதியையும் வெளிப்படுத்துகிறார். ஆனால் இன்னும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டின் சூட்சமத்தை கற்றுக் கொள்ளவில்லை. மேலும் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு அவர் அதை வீணடித்திருக்கிறார்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now