
தற்பொழுது ஆசியக்கோப்பை தொடர் இலங்கையில் வைத்து நடத்தப்பட்டு வருவது, மிகப்பெரிய விமர்சனங்களை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராகவும் மிகக் குறிப்பாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா மீது கிளப்பி இருக்கிறது. ஏனென்றால், இலங்கையில் தற்பொழுது மழை தொடர்ந்து பெய்து வருகின்ற காரணத்தினால், ஏற்கனவே இந்தியா பாகிஸ்தான் விளையாடிய போட்டி பாதிக்கப்பட்டதோடு, அடுத்து இரண்டாவது சுற்று விளையாட இருக்கும் போட்டிகளும் பாதிக்கப்படும் என்பதாக தகவல்கள் தெரிவித்தன.
மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் நஸாம் சேதி “ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு நாங்கள் போட்டியை துபாயில் நடத்தும் யோசனையை சொன்னோம். ஆனால் அவர்கள் அங்கு வெயில் என்று சாக்கு சொல்லி மறுத்துவிட்டார்கள். ஆனால் இவர்கள் அதற்கு முன்பு அங்குதான் ஐபிஎல் தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பை ஆகியவற்றை விளையாடினார்கள்.விளையாட்டில் அரசியலை கலப்பது மிகவும் மோசமானது. இந்தியா பாகிஸ்தான் உடன் விளையாடி தோற்பதற்கு பயப்படுகிறது. இதன் காரணமாகவே மழை முன்னறிவிப்பு இலங்கையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டும் போட்டியை அங்கு நடத்துகிறது” என்று கூறியுள்ளார்.
தற்பொழுது இதற்கு பதில் அளித்து பேசி உள்ள ஜெய் ஷா, “2022 ஆம் ஆண்டு ஆசியக்கோப்பை தொடர் யுனைடெட் அரபு எமிரேடில் நடத்தப்பட்டது டி20 வடிவத்தில். டி20 போட்டியின் சவால்களை, நூறு ஓவர்கள் விளையாடும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியோடு ஒப்பிடக்கூடாது. இதை வலியுறுத்துவது மிகவும் முக்கியம். இந்தச் சூழலில் ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் உறுப்பினர்கள், அந்தந்த அணி நிர்வாகிகளிடம் எங்கு விளையாடுவது என்பது குறித்தான கருத்துக்களைப் பெற்றார்கள். எல்லோரும் செப்டம்பர் மாதத்தில் யுனைடெட் அரபு எமிரேட்டில் ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடுவதற்கு கவலை தெரிவித்தனர்.