Advertisement

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு கோல்ட்ஸ் அணி!

தமிழ்நாடு கோல்ட்ஸ் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள உள்ளூர் அணிகளுடன் ஒருநாள் மற்றும் இரண்டு நாள்கள் கொண்ட போட்டிகளில் விளையாடவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan May 04, 2024 • 15:44 PM
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு கோல்ட்ஸ் அணி!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு கோல்ட்ஸ் அணி! (Image Source: Google)
Advertisement

தமிழ்நாடு கிரிக்கெட் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள உள்ளூர் அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதன்படி மே 06ஆம் தேதி தொடங்கும் இச்சுற்றுப்பயணத்தில், நான்கு போட்டிகளைக் கொண்ட இரண்டு நாள் கிரிக்கெட் தொடரிலும், அதனைத்தொடர்ந்து 7 ஓருநாள் போட்டிகளிலும் தமிழ்நாடு அணி விளையாடவுள்ளது. 

அதன்படி இத்தொடருக்கான தமிழ்நாடு அணியின் பயிற்சியாளராக லக்ஷ்மிபதி பாலாஜியும், அணியின் ஆலோசகராக ராபின் சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் இந்த சுற்றுப்பயணத்திற்கான தமிழ்நாடு அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த அணியில் பிரதோஷ் ரஞ்சன் பால், நாராயண் ஜெகதீசன், சோனு யாதவ், லோகேஷ்வர், விமர் குமார் போன்ற வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். 

Trending


தமிழ்நாடு அணி பொட்டி அட்டவணைே

  • மே  06 - முதல் ஒருநாள் போட்டி - தமிழ்நாடு கோல்ட்ஸ் vs காவலியர்ஸ்
  • மே 07 - இரண்டாவது ஒருநாள் போட்டி – தமிழ்நாடு கோல்ட்ஸ் vs நாட்டிங்ஹாம்ஷையர்
  • மே 09,10 - முதல் இரண்டு நாள் கொண்ட போட்டி - தமிழ்நாடு கோல்ட்ஸ் vs தெற்கு ஆஸ்திரேலியா
  • மே 12 - மூன்றாவது ஒருநாள் போட்டி - தமிழ்நாடு கோல்ட்ஸ் vs ராட்கிளிஃப்
  • மே 13, 14 - இரண்டாவது இரண்டு நாள் கொண்ட போட்டி - தமிழ்நாடு கோல்ட்ஸ் vs ஐசிஎம்
  • மே 16,17 - மூன்றாவது இரண்டு நாள் கொண்ட போட்டி - தமிழ்நாடு கோல்ட்ஸ் vs மோன்டன் சிசி
  • மே 19 - 4ஆவது ஒரு நாள் போட்டி - தமிழ்நாடு கோல்ட்ஸ் vs  ஸ்மெத் விக் சிசி
  • மே 20 - 5ஆவது ஒரு நாள் போட்டி-  தமிழ்நாடு கோல்ட்ஸ் vs பாரோ டவுன் சிசி
  • மே 22 - 6ஆவது ஒரு நாள் -  தமிழ்நாடு கோல்ட்ஸ் vs கிரிக்ஸ் லெவன்
  • மே 23 - 7ஆவது ஒரு நாள் -  தமிழ்நாடு கோல்ட்ஸ் vs ஷார்க் சிசி
  • மே 25,26 - 4ஆவது இரண்டு நாள் கொண்ட போட்டி 

தமிழ்நாடு கோல்ட்ஸ் அணி

பிரதோஷ் ரஞ்சன் பால், நாராயண் ஜெகதீசன், லோகேஷ்வர், சச்சின், விமல் குமார், பத்ரிநாத், பூபதி வைஷ்ண குமார், மோகித் ஹரிஹரன், முகமது அலி, மாதவ பிரசாத், வித்யூத், விக்னேஷ், லக்ஷய் ஜெயின், கார்த்திக் மணிகண்டன், சோனு யாதவ், திரிலோக்நாக், அச்யுத், திரன், லோகேஷ் ராஜ்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement