
தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் 6 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் 7ஆவது சீசன் இந்த ஆண்டு நடக்கிறது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்துகொண்டு விளையாடவுள்ளன.
இந்த தொடருக்கான ஏலம் நடந்து முடிந்த நிலையில், போட்டிக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூன் 23 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரையில் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் நடக்கிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் இந்த தொடர் திண்டுக்கல், கோயம்புத்தூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடக்கிறது.
அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நெல்லை ராயல்ஸ் கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. அதேபோல் இத்தொடரின் எலிமினேட்டர் சுற்று ஆட்டம் ஜூலை 26ஆம் தேதியும், முதல் குவாலிஃபையர் ஆட்டம் ஜூலை 27ஆம் தேதியும் சேலத்தில் நடைபெறுகிறது.