
Tamil Nadu win Syed Mushtaq Ali Trophy 2021 (Image Source: Google)
இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடர் இன்றுடன் முடிவடைந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய கர்நாடகா அணி ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருபினும் அபிநவ் மனோஹரின் சிறப்பான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் கர்நாடகா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அபிநவ் மனோகர் 46 ரன்களைச் சேர்த்தார். தமிழ்நாடு அணி தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.