
ஆஸ்திரேலியா அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு தயாராகும் விதமாக, தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவின் இந்த தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று டர்பன் மைதானத்தில் நடைபெற்றது.
நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய தரப்பில் நான்கு வீரர்கள் அறிமுகமானார்கள். அதில் ஒருவர் இந்திய டாக்ஸி டிரைவர் மகனான தன்வீர் சங்கா. சுழற் பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பா திடீர் உடல்நிலை குறைவால் நேற்று விளையாட முடியாமல் போய்விட்டது. அவருக்கு பதிலாக இந்த வலது கை சுழற் பந்துவீச்சாளர் அறிமுகப்படுத்தப்பட்டார்.
நேற்றைய போட்டியில் இரண்டாவதாக பந்து வீசிய ஆஸ்திரேலியா அணிக்கு நான்கு ஓவர்கள் பந்துவீசி 31 ரன்கள் விட்டு தந்து நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். கேப்டன் ஐடன் மார்க்ரம், ஒரே ஓவரில் டிவால்ட் பிரிவிஸ் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் என அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தியது, இறுதியாக மார்க்கோ யான்சன் விக்கெட்டை கைப்பற்றி ஒட்டுமொத்தமாக தென் ஆப்பிரிக்காவை கட்டுப்படுத்தினார்.