
அயர்லாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை வங்கதேச அணி வென்றது. அதைத்தொடர்ந்து டி20 தொடர் நடந்துவருகிறது. முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் லிட்டன் தாஸ் மற்றும் ரோனி ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 7.1 ஓவரில் 91 ரன்களை குவித்தனர். தொடர்ந்து அதிரடியாக பேட்டிங் செய்துவந்த லிட்டன் தாஸ் 23 பந்தில் 47 ரன்கள் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ரோனி அரைசதத்தைப் பதிவுசெது அசத்தினார். அதன்பின் 38 பந்தில் 67 ரன்களைச் சேர்த்திருந்த ரோனி விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஷமிம் ஹுசைன் 30 ரன்கள், கேப்டன் ஷகிப் அல் ஹசன் 20 ரன்கள் அடிக்க, 19.2 ஓவரில் வங்கதேச அணி 207 ரன்கள் அடித்த நிலையில், மழை குறுக்கிட்டதால் முதல் இன்னிங்ஸ் அத்துடன் முடித்துக்கொள்ளப்பட்டது.